Friday, March 30, 2007

லூஸுத்தனமான WORLD CUP-2007 FORMAT

நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில்,  வரையறுக்கப்பட்ட format சரியில்லாததால், பல விதங்களில் பலருக்கும் நஷ்டம் தான் ஏற்பட்டுள்ளது. இந்த format கால் பந்தாட்ட உலகக் கோப்பையில் பயன்படுத்தப்பட்ட ஒன்று.  அதாவது, ஒவ்வொரு க்ரூப்பிலும் நான்கு அணிகள், ஒவ்வொரு க்ரூப்பிலிருந்தும் 2 அணிகள் தேர்வு பெறுவது என்பது. இந்தியாவும் பாகிஸ்தானும் முதல் சுற்றிலேயே வெளியேறியதால், விளம்பரதாரர்களுக்கும், ICCக்கும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், தொலைக்காட்சி சேனல்களுக்கும் என்று பலருக்கும் பெருத்த நட்டம் !  இதற்குக் காரணம், பார்வையாளர்கள் கணிசமாக குறைந்தது தான்.   இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் பெருவாரியான ரசிகர்களின் ஆர்வம் குறைந்து போய் விட்டது என்பது கண்கூடு :(

ரிக்கி பாண்டிங், 'minnows' அணிகளைப் பற்றிக் கூறிய கருத்து மிகவும் சரியான ஒன்று என்பது என் கருத்து இருக்கும் எட்டு பெரிய அணிகளுடன் (Aus, SA, India, Pak, Eng, WI, NZ, SL) compete செய்யும் அளவுக்கு முன்னேற, அவ்வணிகள் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்!   அயர்லாந்து பாக் அணியை வீழ்த்தியதும், பங்களாதேஷ் இந்தியாவை வீழ்த்தியதும் என்னளவில், Aberrations மட்டுமே !  That particular day was a bad day on the field for India (and Pakistan)!  ஒரு சிறிய அணி (பங்களாதேஷ்) பத்து முறை ஒரு வலிமையான அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்போது, ஒரு முறை வெல்வதில் பெரிய ஆச்சரியமில்லை. அந்த 'ஒரு முறை' உலகக் கோப்பையில் எனும்போது, நமக்கு வலிக்கிறது :(

பங்களாதேஷ் அணி, இந்தியாவில் உள்ள ஒரு நல்ல ரஞ்சி அணியுடன் (மும்பை, மேற்கு வங்கம் ... ) ஒப்பிடத்தக்கது, அவ்வளவே!  நமது மும்பை ரஞ்சி அணி கூட ஒரு முறை மூன்று நாட்களில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியிருக்கிறது உங்களுக்கு நினைவிருக்கலாம்.  அயர்லாந்து போன்ற அணிகளை சென்னையிலுள்ள ஒரு நல்ல முதல் டிவிஷன் அணியுடன் ஒப்பிட்டு நோக்கலாம்!  சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷோ, அயர்லாந்தோ ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாது என்பது என் எண்ணம்,  ஏனெனில், அவர்களின் (பத்து ஆட்டங்களில்) ஒரு முறை வெற்றி என்ற இலக்கு (இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக!) ஏற்கனவே எட்டப்பட்டு விட்டது!   அதே நேரத்தில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக எதுவும் சொல்ல வரவில்லை, அவர்கள் மிக மோசமாக ஆடித் தோற்றார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

உலகக் கோப்பை format எப்படியிருந்திருக்க வேண்டும் என்ற எனது கருத்தைச் சொல்கிறேன்.  முதல் சுற்றில், ஒரு அணிக்கு குறைந்தபட்சம், நான்கு ஆட்டங்கள் ஆடக் கிடைக்க வேண்டும்.  மொத்தம் 15 அணிகளை, மூன்று பிரிவுகளாக(A,B,C) வகைபடுத்தி, ஒவ்வொரு பிரிவிலிருந்தும், 2 அணிகளை தேர்வு செய்திருக்க வேண்டும்.  மொத்தம் எட்டு வலிமையான அணிகள் (Aus, SA, India, Pak, Eng, WI, NZ, SL) இருப்பதால், ஒரு பிரிவில (A) 3 வலிமையான அணிகளும், அடுத்த பிரிவில் (B) 3 வலிமையான அணிகளும், இறுதிப்பிரிவில் (C) 2 வலிமையான அணிகள் மட்டுமே இருக்கும் சாத்தியம் இருப்பதால், C பிரிவில், பங்களாதேஷ், கென்யா, ஜிம்பாப்வே என்று (வலிமை குறைந்த அணிகளில்) இருப்பதிலேயே சற்று திறமையான 3 அணிகளையும் சேர்க்க வேண்டும்!

உதாரணமாக,
A பிரிவு - India, England, WI, Ireland, Canada என்றும்
B பிரிவு - South Africa, NZ, Srilanka, Scotland, Holland என்றும்
C பிரிவு - Australia, Pakistan, Bangladesh, Kenya, Zimbabwe என்றும்
வகைப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

அடுத்த சுற்று, சூப்பர் ஆறு (super six) அணிகளுக்கானது. இந்த சுற்றில், ஒவ்வொரு அணிக்கும் தலா 4 ஆட்டங்கள் கிடைக்கும். முதல் சுற்றில் எதிர்த்து ஆடிய அணியுடன் மறுபடியும் ஆட வேண்டியதில்லை.

ஆறு அணிகளில், முதல் 4 இடங்களில் உள்ள அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். அப்புறம், இறுதிச்சுற்று.

இந்த format-இல், மொத்தம் 45 ஆட்டங்கள் (முதல் சுற்றில் 30 ஆட்டங்கள், சூப்பர் ஆறில் 12 ஆட்டங்கள், 2 அரையிறுதி ஆட்டங்கள், 1 இறுதியாட்டம்) நடைபெறும்.  இந்த format-இல், முதல் சுற்றில், பெரும்பான்மையான ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும், முதல் சுற்று அதிர்ச்சி வெளியேற்றங்களும் இருக்காது!!!  அடுத்த உலகக் கோப்பையிலாவது, format விஷயத்தில், ICC விழித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன் :)

எ.அ.பாலா

*** 318 ***

8 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Test comment :)

A Simple Man said...

அணிகளின் அட்டவணை அறிவிப்பு வந்தவுடனேயே நான் கூறியதும் இதுதான் (யாரிடம் என்று கேட்காதீர்க‌ள் :))

நீங்க‌ கொடுத்திருக்கும் ப‌ட்டிய‌லும் ச‌ரிதான்.. ICC க்குப் போய் சேருதான்னு பார்க்க‌லாம். க‌ட‌ந்த 2003 ல் சூப்ப‌ர் 6 முறைதான் இருந்தது. அதில் 2 குழுக்க‌ள் ம‌ட்டுமே இருந்ததால் (ஒவ்வொன்றிலும் 7அணிகள் ) முத‌ல் சுற்று ச‌ற்றே இழுவையாக‌ இருந்ததும் உண்மை.

அப்புற‌ம் இன்னொரு விஷ‌‌ய‌ம்.
///சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷோ, அயர்லாந்தோ ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாது என்பது என் எண்ணம்////

இவையிர‌ண்டும் ஆடும் போட்டியில் ஏதேனும் ஒரு அணி வெற்றி பெறுமே.. (ஒருவேளை டை ஆயிடுமோ :))

said...

/*சூப்பர் எட்டு சுற்றில் பங்களாதேஷோ, அயர்லாந்தோ ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாது என்பது என் எண்ணம் */

What about when they meet each other in Super 8? :-)

- Ravi

said...

A பிரிவு - India, England, WI, Ireland, Canada

இப்புடி பிரிச்சா மட்டும் நெஸ்ட்டு ரவுண்டுக்கு போயிடுவோமாக்கும்...

லூஸுத்தனமாயில்ல !!!

மணிகண்டன் said...

உங்க ஃபார்மேட் நல்ல தீர்வு பாலா. இந்தியாவோ பாகிஸ்தானோ முதல் சுற்றிலேயெ வெளியே போகும்னு ஐசிசி கனவுல கூட நினைச்சிருக்காது. அடுத்த முறையாவது ஒழுங்கா திட்டமிட்டா சரி.

enRenRum-anbudan.BALA said...

Abul,
//அணிகளின் அட்டவணை அறிவிப்பு வந்தவுடனேயே நான் கூறியதும் இதுதான் (யாரிடம் என்று கேட்காதீர்க‌ள் :))
//
வருகைகு நன்றி ! கேட்க மாட்டேன் :)

Ravi,
//What about when they meet each other in Super 8? :-)
//
I missed the POINT :)

//இப்புடி பிரிச்சா மட்டும் நெஸ்ட்டு ரவுண்டுக்கு போயிடுவோமாக்கும்...

லூஸுத்தனமாயில்ல !!!
//
நன்றி ! தெரியலையே, ராசா :)

மணிகன்டன்,
வாங்க ! ஏதோ ஆதங்கத்துல எழுதின பதிவு தான் :)

பாரதிய நவீன இளவரசன் said...

//ஏதோ ஆதங்கத்துல எழுதின பதிவு தான் :) // என்று நீங்கள் தெரிவித்தபோதும்..உங்களது இந்த வலைப்பதிவு, உலகக் கோப்பைக் கிரிக்கெட் பற்றி வெளிவந்த வலைப்பதிவுகளிலேயே மிகச் சிறந்த வலைப்பதிவு என்பேன்.

enRenRum-anbudan.BALA said...

//
Bharateeyamodernprince said...
//ஏதோ ஆதங்கத்துல எழுதின பதிவு தான் :) // என்று நீங்கள் தெரிவித்தபோதும்..உங்களது இந்த வலைப்பதிவு, உலகக் கோப்பைக் கிரிக்கெட் பற்றி வெளிவந்த வலைப்பதிவுகளிலேயே மிகச் சிறந்த வலைப்பதிவு என்பேன்.
//
Thank you Sir :)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails